பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 T பட்டி மண்டப வரலாறு


குறிப்பனவாயினும் ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருட் குறிப்பை உடையது.

‘சொல்தல் என்றால் சொல்லை ஒலித்தல் என்று பொருள். மொழிதல் தனக்கென அமைந்த இயல்பில் சொல்லல் கிளத்தல்’ எடுத்துச் சொல்லல் கூறல் கூறு படச் சொல்லல் அறைதல் உறுதியாகச் சொல்லல், ‘உரைத்தல் விளக்கி உரை கூறுதல் . இவ்வாறு பேசுதல் என்னும் கருத்தைக் குறிக்கப் பல்வேறு வடிவில் சொற்கள் உள்ளன . இவையாவும் தத்தம் பொருள் வேறுபாட்டுடன் இக்காலத்தில் வழங்கப்படவில்லை. இடைக்கால இலக் கியங்களில் மாறிப் போயின . முற்கால இலக்கியங்களில் பெரும்பான்மையாக உள்ளன உரிய பொருட்குறிப்பு மாறியதற்கு இலக்கண அமைதியும் ஏற்பட்டது.

“எண்ணத்தின் தோல் சொல்” என்றார் ஆல்மிக என்னும் மேனாட்டறிஞர் தமிழன் வகுத்துக்கொண்ட துறைகளும் எண்ணத்தின் மெருகுத் தோல்களாகவே விளங்கின. அத்துறைகளைத் தமிழ்ச் சொற்களும் தொடர் களும் அடுக்கி அடுக்கி அடையாளங் காட்டுகின்றன.

மாந்தன் தன் உள்ளத்து உணர்வைச் சொல்லாக்கி மற்றவர்க்கு உணர்த்தி வாழவேண்டியவன். “எண்ணங்களை ஒவியமாகத் தீட்டிக் காட்டுவதேபேச்சு” என்றார் பாஃச்கல், வாயிருந்தும் இதனைச் செய்யாதவன் ஊமை மட்டும் அல்லன்; விலங்கும் ஆவான்.