பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி சொல், பெயர் ஆய்வு | 165

உரையாடல்

செய்யுளுக்குரிய பொருளை உரையாசிரியன் மாணவனுக்கு உரைக்கும்போது மாணவன் ஐயங்களைக் கேட்பான். “நன்று சொன்னாய்” என்று ஏற்றும், “அறியாது கடாயினாய்” என்று மறுத்தும் ஆசிரியன் உரை பற்றிப் பேசுவான் . இவ்வாறு அமையும் உரை பற்றிய இருவர் பேச்சு உரை (ஆள்தல்) ஆடல்’ எனப்பட்டது . தொடர்ந்து ‘உரை என்ற கருத்தில் மட்டும் உரையாடல் என்னும் தொடர் அமையவில்லை . பொருள் உரைக்கும் உரையில் வேறு சில கருத்துகளும் இடம் பெற்றன . தொடர்ந்து பிற கருத்துகள் மிகுதியாக இடம் பெறலாயின. இவ்வாறு இடம் பிடித்த வேறு பேச்சுகளும் இந்த உரையாடல் என்னும் தொடரைத் தமக்கு ஆக்கிக்கொண்டன. தம் உரிமையாகவே தங்க வைத்துக் கொண்டன . இதனால் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதைக் குறிக்கவே உரையாடல் என்பது நிலையாகப் பயன்படலாயிற்று.

“மெல்லிய இனிய கூறலின் இனியான் அஃது

ஒல்லேன் போல உரையா @5

என்று ஒரு நற்றிணைத் தலைவி உரையாடுகின்றாள்.

உரையாட்டு இல்லை உறுதவத்தீர்”

என்று கோவலன் கவுந்தியடிகளிடம் உரையாடினான்.

“சற்று நீங்கித் தொழுது உரையாடி’