பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 [T] பட்டி மண்டப வரலாறு

இக்குறளுக்கு விளக்கவுரை போன்று,

‘சொற்பொழிவில் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும். ஒன்று, விளக்கமான கருத்துச் சொற்கள் (தகை - தக்கசொல்) இரண்டு, கேட்கும் மக்களது - மனத்தைத் தொட்டு இழுத்தல் (பிணித்தல்); மூன்று, மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டவேண்டும் (வேட்ப

மொழிவது). - - என்றான் ஒரு மேலைநாட்டறிஞன் . அவன் தமிழ் நாட்டுப் பரிமேலழகன் அல்லன் . மேடைப்பேச்சின்

பிறப்பிடம் என கூறப்படும் கிரேக்க நாட்டுப் பேரறிஞன் கியும்டிலியன் என்பது அவன் பெயர் கேட்டார்ப் பிணிக்கும்” திருக்குறளை கியும்டிலியன் படித்து, அதனால் பிணிக்கப்பட்டு அதன் கருத்தையே இவ்வாறு கூறினானோ (?) என்றன்றோ எண்ணம் எழுகின்றது. மற்றொரு கூட்டுச் சான்று :

“சிறிய சொற்றொடர்கள் அமைந்த எளிய நடையில், கருத்துக்களை விளக்கும் சொற்றொடர்களாக எளிமை, இனிமை, சுருக்கத்தோடு முறையாகச் சொல். . . . . . . . . . . . . ‘இவ்வாறு கூட்டத்தை நோக்கித் திறமையாகப் பேசு”, இஃதொரு மேலைப் பொன்மொழி.

“எதுசெயலைத் துண்டுகின்றதோ அது

சிறந்த பேச்சு”

- இஃதொரு மேலை பொன்மொழி.