பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 171

-

என மறைந்த தமிழ்ச்செல்வர் டி . கே. சிதம்பரநாதனார் எல்லாம் வெளிநாட்டுச் சரக்கு என்று சொல்பவரைக் குறிப்பாக மறுத்துக் கூறினார் . சொற்பொழிவு நம் நாட் டிற்கு இறக்குமதியானது என்பதற்கு மாறாகத் பழந் தமிழகத்தில் இத்துறை இருந்தது. இது நெறியும் முறையும் கொண்டதாகவிளங்கியது. செம்மையும்செழிப்பும் உடைய தாகத் துலங்கியது.

சொற்பொழிவைக் குறிப்பாகவும் சிறப்பாகவும் கொண்ட தமிழ் நூல்களிலிருந்து பலவற்றையும் காட்டி னால் அஃது ஒரு தனி நூலாகவே ஆகும் . எனவே, திருக்குறள் ஒன்றுகொண்டே அறிதல் இங்கு நலமாகின்றது. திருக்குறளில் உள்ள அவையறிதல், அவையஞ்சாமை, சொல்வன்மை என்னும் மூன்று அதிகாரக் குறட்பாக்கள் சொற்பொழிவின் இலக்கண விளக்கங்களாக உள்ளன. இக் கால மேல்நாட்டினர் பலர் சொற்பொழிவின் இலக்கணம் கூறுவது போன்று பல கருத்துக்களை வெளியிட்டனர். அவையெல்லாம் அன்னோர் திருக்குறளை அறிந்தோ அறியாமலோ வெளியிட்டவை. பெரும்பாலும் அறியாதார் என்றே கொள்ளவேண்டும்.

“கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்”.

என்னும் குறள் சொற்பொழிவு நெறிக்கு ஒரு நன் னெறி.