பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 T பட்டி மண்டப வரலாறு


சொற்பொழிவு

சொற்பொழிவு, சொற்பெருக்கு என்னும் சொல் லமைப்புக்கள் பிற்காலத்தில் உருவானவை. மழை பொழி வது போன்று தடையின்றிச் சொல்லைப் பொழிதல் சொற்பொழிவு , அது தனியே நின்று கொண்டு பொழிவது அன்று. இருவர்க்குள் உரையாடிக்கொள்வதும் அன்று. ஓர் அவை ஒரு தலைவர் ஒரு சொற்பொழிவாளர், ஒரு கருத்து கேட்போர் இவற்றுடன் முறையும் நெறியும், நயமும், சுவையும், கருத்தும் பொருத்தமும் கொண்டதாக அமைய வேண்டும் மழைப்பொழிவதால் வளம் விளைவது போன்று கேட்போருக்குப் பயன் விளைய வேண்டும். சில காலம் மழை பொழியாமல் அடித்துக்கொட்டி அழிப்ப துண்டு அது போன்று கேட்டைத் தூண்டிவிடும் பேச்சுகளில் சொற்கள் பொழியப்பட்டாலும் அது சொற்பொழிவாகாது. அது சொல்லாட்டமாகும்.

சொற்பொழிவு என்னும் சொற்றொடர் முற்காலத்தில் தமிழில் இல்லாததால் தமிழகத்தில் சொற்பொழிவே நிகழ்ந்ததில்லை, சொற்பொழிவு என்றொரு துறை இல்லை - என்று கூறக்கூடாது.

“தமிழ்நாட்டில் பழைய காலத்தில் சொற்பொழி வாற்றுவது உண்டா? பேச்சு வன்மை உண்டா? என்று பலர் கேட்கிறார்கள். ஏதோ பேச் செல்லாம் கப்பலேறி ஆங்கிலத்தோடு ஆங். கிலமாக வந்ததாக எண்ணம்”.