பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 169

விடல்"62 என்று விளக்குகின்றது . இது பயனிலாச் சொல்லாடல். -

ஒர் ஆயர்குலச் சிறுமி ஊர்க்குள் மோர் விற்றபோது கோவலன் வெட்டுண்ட செய்தி கேட்டாள். ஆயர் சேரியில் தங்கியிருந்த கண்ணகியிடம் சொல்ல ஒடோடி வந்தாள் சிறுமி கொடிய செய்தி எப்படிச் சொல்வாள்? வாய் குளறிற்று சொல்லே வரவில்லை.

“சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்” அவள் நிலையை உணர்ந்த கண்ணகி ஏதோ தீங்கு நிகழ்ந்து விட்டது என்று உணர்ந்தவளாய் அவளிடம் செய்தியைப் பெறத் தகுதியான சொற்களைக் கொண்டு,

“அந்நங்கைக்குச் - சொல்லாடும் சொல்லாடும் தான் (33 என்று இளங்கோவடிகள் சொல்லாடலை அடுக்கிக் கூறச் செய்தார்.

இவ்வாறெல்லாம் சொல்லாடல் என்னும் தொடர் இலக்கியங்களில் பேச்சு மிடுக்கைப் பேசி நிற்கின்றது.

உரையாடலின் வளர்ச்சி சொல் வன்மை, சொற் றிறன், சொல்லாடல், சொலல்வல்லன், சொல்லாட்டி, சொல்லாற்றுதல் என்றெல்லாம் அமைந்தது.

உரையாடல், சொல்லாடலின் அடுத்த முனையாகச் சொற்பொழிவு அமைந்தது.