பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பட்டி மண்டப வரலாறு

தீச் சொல், எள்ளுஞ்சொல் எனப்பட்ட இவை தள்ளவேண்டிய சொற்கள். - இவ்வாறெல்லாம் பிற நூல்களும் ஆங்காங்கே காட்டியுள்ளன. ஒரே தொகுப்பாக ஒரு நூல் முற்காலத்தில் இல்லை.

இத்துணை வரையறைகள் சொல்லப்படும் சொற் பொழிவிற்கு முற்காலத்தில் ஒரு தொடர் இல்லையோடு எனலாம் ஒரு தொடர் இல்லை; வகைக்கொன்றாகப் பல தொடர்கள் இருந்தன.

இலக்கிய இலக்கணக் கருத்துக்களை விரித்து உரைக்கும் சொற்பொழிவு “விரிவுரை எனப்பட்டது.

அறிவுரையாக வழங்கப்படும் சொற்பொழிவு “நல்லுரை” எனப்பட்டது.

அறிவுறுத்தலாகப் பொழியப்பட்டது “செவியறிவுறுஉ”

வாழ்த்துரையாக வழங்கப்படுவது “வாயுரை வாழ்த்து”

ஆன்மிகத் தொடர்பாக உரைக்கப்படுவது “புண்ணிய நல்லுரை”,

இத்துணையும் தொகுத்துக் கூறும் ஒரு சொல் “கட்டுரை” என்பது -