பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 |- பட்டி மண்டப வரலாறு

களிலும் உரையாடலை விடுத்து, மறுத்து மறுத்து உரை யாடிய சொற்போர்கள் பல உள்ளன.

இலக்கியங்கள் வழியாகக் கால காலங்களில் நிகழ்ந்த சொற்போர்களை அறிகின்றோம். இக்காலத்திலோ சொற் போரே இலக்கியங்களைப் பேசுகின்றது. இலக்கியமாகவும் ஆகியுள்ளது.

சொற்போர் நல்ல கருத்தை நிலைநாட்ட வேண்டி நிகழின் அதனைக் கருத்துப்போர் என்று குறிக்கலாம்.

சங்கக்காலப் பட்டிமண்டப நிகழ்ச்சிகள் கருத்துப் போர்களாகவே நிகழ்ந்தன . சொற்போரோ, கருத்துப் போரோ ஒர் அமைப்பாக அமையவேண்டுமாயின் ஒரு தலைவரை நடுவராகப் பெறவேண்டும். இருவர் மாறிமாறித் தடைவிடைகளால் சொல்லாட வேண்டும் தனியராகச் சொற்போரிடுவது போன்று இரண்டு குழுக்களாக அமைந்து சொற்போரிடலாம் கேட்போர் கூட்டத்தைக் கொண்ட மன்று அமையவேண்டும் . இவ்வாறு நிகழ்ந் ததை முற் காலத்தில் பட்டிமண்டபம்’ என்னும் சொல்லால் குறித்தனர்.

இப்பட்டி மண்டப வளர்ச்சி பற்றி முன்னர் விளக்கப்பட்டது. பட்டிமண்டபம்'என்னும்பெயர்பற்றிய விளக்கம் ஒன்றையும் காணவேண்டும்.

முதற்பகுதியில் விளக்கியவாறு புலவர் அமர்ந்து பாடல் பயிலிடம் பட்டிமண்டபம் எனப் பெயர்பெற்றது.