பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 181

“பாலறி மரபின் பொருளர்க் கண்ணும்” என்னும் தொல்காப்பிய வாகைத்திணை நூற்பா கண்டோம். அதில் பொருநர் என்பதுபோரிடுவோரைக்குறிக்கும். பொருதல் என்றால் ஒருவர்க்கொருவர் மோதிக்கொள்ளல். அம் மோதல் செய்வோர் சமமான வல்லமை உடையவராக இருப்பர் . பொருந்’ என்றால் போல - சமமாக ஒத்ததாக என்றும் பொருள் . எனவே, பொருநர் ஒத்த வலிமை உடையவராக மோதிக்கொள்ளுதல், போர் செய்தலாகும்.

அப்போர் உடல் வலிமைப் போராகலாம், சொல் வலிமைப் போருமாகலாம். “சொல்லாலும் பாட்டாலும் * - - - - - வேறலாம்” என்னும் உரையும் கண்டோம். இதன்படி சொல்லால் பொருதல் போரிடல் சொற்போர் ஆயிற்று அக்காலத்தில் சொற்போர் என்னும் சொல்லமைப்பு இல்லை . என்றாலும் இந்தப் பொருதல் - சொல்லால்” என்னும் இரண்டின் இணைப்புகளால் சொற்போர் என்னும் சொல் உருவாகியிருக்கிறது.

இச்சொற்போர் நூல் அரங்கேற்ற அவையிலும் நிகழும்; விரிவுரை அவையிலும் அமையும், சில வேளை களில் மன்னர் அவையிலும் அமையும் அச்சொற் போர் கருத்துக்காக நிகழும் கருத்துப்போர் ஆயினும் அதற்குச் சொல் வன்மையே பயன்படுவதால் சொல்லின் பெயரில் சொற்போரேயாகும் பாண்டியன் அவையில் கண்ணகிக் கும், நெடுஞ்செழியனுக்கும் நேர்ந்த வழக்காடல் உரையும் ஒரு சிறு சொற்போரே . இது போன்று பல இலக்கியங்