பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 T பட்டி மண்டப வரலாறு

எனவே, இந்த இலாவணி, தெருப்பட்டி மண்டய’ மாக - அதிலும் முச்சந்தி, நாற்சந்திப் பட்டிமண்டபமாக நிகழ்ந்தது. பட்டி மண்டப வரலாற்றில் இதற்கும் ஓர் இடம் உண்டு. -

மேலே கண்ட பாடல்களை நோக்கினால் அவற்றில் விருத்தப்பாக்களைக் காணலாம். எனவே தொடக்கக்காலத் தில் புலவர்களால் யாக்கப்பெற்ற பாடல்களைக் கொண்டு சமயக் கருத்துப் பட்டி மண்டபமாக இருந்து, பின்னர் மாறியதாகக் கொள்ளவேண்டும் கால விளைச்சலில் இவ் வாறு தடம் புரண்டது. -

இதில் பாடப்படும் பாடலை இலாவணிப் (லாவணி) பாடல் என்பர். இப்பெயர் எவ்வாறு வந்தது? -

“லாவணி என்பது மராத்திய மொழியில் இசைப்

  • 4 # பாடல் வகை” என்கிறது

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி. அறிஞர் வையாபுரிப்பிள்ளையவர்களின் கருத்தும் இஃதே.

ஆனால், இப்பாடல் போக்கு, தமிழ் மக்களின் தென் பாங்கு வகையில் இசைப்பு கொண்டது . காமன் விழா நிகழ்ச்சி மராத்திய மண்ணில் தோன்றி, தமிழ் மண்ணில் புகுந்து மராத்திய மொழியின் பாடற்பெயரைப் பெற் றிருக்கவேண்டும்.

எவ்வாறாயினும் இப்போர், பட்டிமண்டபத்திற்குரிய களம், அறைகூவல், இசைப்பாட்டால் போரிடுவோர்,