பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [...] 223

வள்ளலார் அருட்பாவின்பால் ஈடுபாடு கொண்டிருந்த அடிகளார் ஏற்றார். இதனைத் தீர்த்துக்கொள்ள ஒரு பட்டி மண்டபம் ஏற்பாடாகியது.

20 9 1903 இல் சிந்தாதிரிப் பேட்டையில் ஒர் அறமன்ற நடுவர் தலைமையில் கருத்துப்போர் நிகழ்ந்தது. மறைமலையடிகளாரும் கதிரைவேற்பிள்ளையும் மாறி மாறிப் பேசினர் . அடிகளார் உரையும், காட்டிய சான்று களும் பிள்ளையவர்களால் மறுக்க முடியாத நிலையில் பிள்ளையவர்கள் தடம் புரண்டு வேறு சில பேசினார். இடையில் எழுந்து அவையை விட்டுப் போனார் . நடுவர் அருட்பா சார்பில் பேசினார் . ஆயினும், வழக்கை முன் வைத்தவர் அவையில் இல்லாமையால் தீர்ப்பாக முடி சொல்லாது ஒற்றிவைத்தார். *

மீண்டும் 27, 9. 1903 இல் இதே அமைப்பு ஏற் பாடாயிற்று. இசைந்திருந்த பிள்ளையவர்கள் வர வில்லை அடிகளார் தம் விளக்க உரையுடன் கூட்டம் கலைந்தது.

மூன்றாவது முறையாக 18, 10 1903 இல் சென்னை வேணுகோபால் சென்டிரல் கூடத்தில் வழக்குரை ஏற்பா டாயிற்று பிள்ளையவர்கள் வரவில்லை மூன்றா வதாகையால், நடுவரால் “வள்ளலார் பாடல்கள் அருட் பாக்களே” என்று தீர்ப்பு வழங்கப்பெற்றது.

இது பட்டிமண்டபப் பாங்கேயாயிற்று. இந்நிகழ்ச்சி ஞானசம்பந்தர் பொருள்வாதம், அனல் வாதம், புனல் வாதம்