பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 T பட்டி மண்டப வரலாறு

பொதுமக்கள்பால் அவருள்ளும் எளியவர்பால் சிலப்பதிகாரம் அறிமுகமாயிற்று கருத்துக்கள் அறியப் பட்டன. கண்ணகி, மாதவி, கோவலன் வாழ்ந்த மண்ணில் இது நிகழ்ந்தமை ஒரு சிறப்பு. இவர்கள் பெயரையும் கேளா தோராக வாழ்ந்த அப்பகுதி மக்கள் பலரை மண்ணின் பெருமக்களை உணரவைக்கும் பயனாக இது அமைந்தது.

இது போன்று உலகத் தமிழ் மாநாடுகள் தமிழகத்தில் நிகழ்ந்தபோது அவற்றின் பொது மாநாட்டு நிகழ்ச்சிகளில் பட்டி மண்டபம் இடம் பெற்றது . புகழ்பெற்ற பட்டி மண்டபச் செம்மல்கள் பங்கு பெற்றனர் . பல நூறாயிரக் கணக்கில் அவையோர் செவி மடுத்தனர், சுவைத்தனர். பெருமளவில் சுவை நிகழ்ச்சியாகவும், நயப்பொழுதுபோக் காகவும் இவை அமைந்தன. கருத்து வழங்கலும் நேர்ந்தது. பலர் செவிமடுத்தனர் என்பதன்றிப் பெரும் பயன் விளைந்த தாகப் பதிய இயலவில்லை. வெளிநாட்டவர் செவி மடுத் தமை ஒரு பயன் எனலாம்.

சைவ சமயத் திருமடங்களிலும் பட்டி மண்டபம் இடம் பெற்றமை குறிக்கத்தக்கது.

தருமபுரம் சைவத் திருமடத்தில் சைவக்குருமணி வீற்றிருக்க இன்றைய மடத்துத் தலைவராக வீற்றுள்ள தவத் திரு சோமசுந்தர அடிகள் அன்று கட்டளைத் தம்பிரானாக இருந்து ஒரு பட்டி மண்டபத்தை இயக்கினார்கள்.

பெரும்புலவர் கி , வா சகந்நாதனாரும் சைவப் பெரும்புலவர்களும் தமிழ் அறிஞர் பெருமக்களும் சைவப்