பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 255

நிகழ்ந்ததாலும், தவத்திரு அடிகளார் தம் பொறுப்பில் நிகழ்த்தித் தாமே நடுவராயமைந்ததாலும் பல்லாயிரவர் திரண்ட அவையைக் கொண்டதாக அமைந்தது.

பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடத் திறப்பு விழாவில் நிகழ்ந்த மும்முனைப் பட்டி மண்டபம் அந்நாள் முதல்வர் டாக்டர் கலைஞர் முன்னிலையில் அந்நாள் அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களை நடுவராகக் கொண்டு நிகழ்ந்தது.

‘சிலப்பதிகாரத்தில் இன்றியமையாச் சிறப்புடையது

புகார்க் காண்டமா?

மதுரைக் காண்டமா?

வஞ்சிக் காண்டமா?” என மும்முனைப் பொருளாயிற்று புகார்க் காண்ட அணித்தலைவராக இதனை எழுது பவரும், மதுரை காண்டத்திற்குக் கவியரசு பொன்னி வளவன் அவர்களு வஞ்சிக் காண்டத்திற்குபேராசிரியர் முனைவர் மெ. சுந்த அவர்களும் அணித்தலைவராக அமைக்கப்பட்டுக் கருத்து போரிட்டனர்.

அந்நாளைய அமைச்சர் பெருமக்கள், அரசு ஆட்: அலுவலர்கள், தமிழ்ப் புலமையர், அரசியல் இயக்கத்தார் பொதுமக்கள் என நூறாயிரவரைக் கொண்டதாக அவை அமைந்தது.

‘மதுரைக் காண்டமே இன்றியமையாச் சிறப் புடையது’ என்பது தீர்ப்பாயிற்று.