பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ா பட்டி மண்டப வரலாறு


நடுவர் அவர்கள் தம் தீர்ப்பாக, பரிமேலழகர் உரையைச் சான்றாகக் கொண்டு “காட்சியளவையான் உணரப்படும்"என்று தீர்ப்பளித்தார்.

எழுத்துப் பட்டி மண்டபமாகிய இஃது ஒரு புது விளைச்சல் (இக்காலத்தில் சில இதழ்கள் எழுத்துப் பட்டி மண்டபக்கருத்தைவெளியிடுகின்றன.)

மேலே காணப்பட்ட கவிதைப்பட்டி மண்டபங்களும் எழுத்துப் பட்டி மண்டபமும் முன்னே பொற்காலம் என்று குறிக்கப்பெற்ற கால எல்லையாகிய 1960 இற்குப் பின்னர் நிகழ்ந்தவை. ஆயினும், இவற்றின் புதுமைப்பாங்கும், தகவுப் பங்கும் நோக்க, பட்டி மண்டபப் பொற்காலத்து அணிகலன்களாகின்றன.