பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ) பொற்காலப் படைப்பாளர்

இயக்குநர்

மண்டப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அமைத்துநெறியாக இயக்கியோர்படைப்பாளரில் மூலவர். பல்வகையினர் இவ்வாறு செயலாற்றியுள்ளனர் . சிறப் பாகவும் தனிக்குறிப்பாகவும் திரு சா. கணேசன் அவர்களே அவருள் முதன்மையானவரும் முதல்வரும் ஆவார்.

நடுவர்

அடுத்து நடுவராக அமர்ந்தோர் குறிக்கத்தக்க படைப்பாளர் பட்டி மண்டப நடுவர் என்றவுடன் நினை வில் நிற்பவர் தவத்திருகுன்றக்குடி அடிகளார்தாம்.

பட்டி மண்டபப் பொருளை ஆய்ந்து முன்கூட்டியே நூல்களைப் பார்த்துக் கருத்துக்களைத் தொகுத்து முறைப் படுத்தி நடுவர் தன்மையை உணர்ந்து செயற்பட்டவர் அடிகளார் . நடுவர்க்கென வகைப்படுத்தப்பெற்ற அச் சிதழையும் உருவாக்கிக் கையில் கொண்டு பதியச் செய்து திறனொடு அவற்றைத் தேர்ந்து சீர்தூக்குவதில் வல்லவர் அடிகளார் , தம் இயல்பான கருத்து ஊறும், அறிவால் பொருத்தமான இடத்தில் திருத்தமான நயங்களையும் ஆழ் கருத்துக்களையும் சுவையுடனும் வெளிப்படுத்தும் பாங்