பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பட்டி மண்டப வரலாறு

ஆரியம், எபிரேயம், சீனம், கிரிக்கு இலத்தீன் மொழி களிலும் அளவை நூல்கள் அவ்வம்மொழிப் பெயரில் இருக்கின்றன . சிறப்பாக வடமொழியில் முற்காலத்தில் வைதிக நெறிகளாகிய நியாயமும் வைசேடிகளும் தருக்க நெறிகளைக் கொண்டவை . மணிமேகலையும் வைதிக மார்க்கத்து அளவை” என்று வைதிகமாக அடை மொழி தந்தது.

கெளதமர், கணாதர் என்னும் வேத மொழிச் சான்றோர் ஆரியத்தில் தருக்க சாத்திரங்களை எழுதினர். அவர்வழி 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அன்னம்பட்டர் என்பார் தருக்க சங்கிரகம் எனும் நூலை வடமொழியில் எழுதினார். (தமிழ்ச் சிவஞான முனிவர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்) வடமொழியில் தருக்க சாத்திரம் விரிவாக உள்ளது. - தருக்கமுறைப் புலக்கொள்கை

உலக மொழியாகத் திகழும் ஆங்கிலத்தில் Logic என்று தருக்கக் கலை உள்ளது . இக்கலையின் ஒரு தோற்றமாக அகஃச்டெகாம்டி (1798-1857) என்பார் தருக்க முறைப் புலக்கொள்கையை வகுத்தார். பின்னர் வலிவிழந்த இக்கொள்கை இந்நூற்றாண்டின் முதற்பகுதியில் மீட்கப் பட்டது . இஃதொரு கொள்கை என்றவளவில் இங்கு ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இக்கொள்கை மொழி என்பதைக் கீழ்வருமாறு விளக்குகிறது : -