பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் . | 289

“மொழி என்பது அண்டம்பற்றியுள்ள

- நிகழ்வுகளாகக் கூறும் சொற்றொடர்களின் முழுத் தொகுப்பு” என்னும் இவ்விளக்கம் நிகழ்வை உண்மை நடப்பை அடித்தளமாக மொழிக்குக் கொள்கிறது. மொழி யாம் சொற்றொடரை இரண்டு வகையாகப் பிரிக்கிறது . ஒன்று பொருளுள்ள சொற்றொடர், இரண்டு பொருளற்ற சொற்றொடர்’, மெய்ப்பிக்கக் கூடாதவை பொருளற்ற சொற்றொடர் கடவுள் உண்டு என்பதை மெய்ப்பிக்க முடியாதாகையால் இதனைப் பொருளற்ற சொற்றொடர்’ என்கிறது. இப்புலக்கொள்கை.

தமிழ், ஆரிய அளவைநூல்கள் அளவையைப் பத்தாக வகுத்துள்ளன. அவை

1. காண்டல் 2 கருதல் 3. உவமம் , TLST (ஆகமம்) 5. பொருள் அளவை (அருந்தாபத்தி) இயல்பு 7. மரபு 8 இன்மை (அபாவம்), 9 மீட்சியொழிவறிவு 10 நிகழ்ச்சி (சம்பவம்)” எனப்படும். இவற்றில் காண்டல், இயல்பு, நிகழ்ச்சி என்னும்

மூன்றையும் மேல்எடுத்துக் கொண்ட தருக்கமுறைப் புலக்

கொள்கையுடன் ஒப்பீடுசெய்யலாம். - புலக்கொள்கையும் தமிழ் இலக்கணமும்

இப்புலக் கொள்கை சில தமிழ் இலக்கணத்திற்குச் சற்றுப் பொருந்துவதாகத் தோன்றுகிறது.