பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 19

கருத்து, உண்மை நிகழ்வுக்கு ஈடாகுமானால் சான்றாகக் கொள்ளலாம்; கொள்ள வேண்டும்.

பட்டி மண்டப ஊற்றுக் கண்

இதன்படி கற்பனைக் கதையாயினும் நிகழ்ச்சி அமைப்புக் கருத்துக்கள் முற்கால நடைமுறைக்கும், இயல்பான அறிவுக்கு ஒத்தும் இருப்பவைகளைப் பக்கச் சான்றுகளாகக் கொள்ளலாம்.

பத்துப்பாட்டும், தொல்காப்பியமும் குறிப்பாகக் காட்டியவற்றிற்கு உரையாசிரியர் விளக்கம் கொண்டு கண்ட பட்டிமண்டப வரலாற்றின் முதற்கல்லும், அடுத்து சங்கப்பாடல் மூலத்தில் வழங்கப்பெற்றதும், புராணம் தழுவியதும் ஆகிய இரண்டாவது கல்லும் பட்டிமண்டப வரலாற்றின் நாற்றங்கால்களேயாகும், ஊற்றுக்கண் ஆகா.

அவ்வாறானால்,

ஊற்றுக் கண் எது?

எக்காலத்தது? இவ்விரண்டும் பட்டிமண்டபத்தின் மூலத் தோற்றத்தைக் காண எழவேண்டிய வினாக்களா கின்றன.

விடைகளைக் காண்போம்.

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் தொல்காப்பியரின் உடன் மாணாக்கர் பாயிரம் எழுதினார். இவர் தொல்காப்பியர் காலத்தவர். இவர் தனியாக எழுதிய