பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 21

நிறுப்புகளால் கருத்துப்போர் நேரும்போது, தான் தன்னைப் புகழலாம் என்று அவ்வடிகாட்டுகிறது.

இது கொண்டு,

மன்னிய அவையில்

சொற்போரிட்டு வெல்லும் நிகழ்ச்சி அக்காலச் சூழலில் இருந்தது என்று காண்கிறோம் . வெல்லுறும் இக்கருத்துப்போர் நமக்குக் கிடைக்கும் அளவில் பட்டிமண்டபத்தின் ஊற்றுக்கண் ஆகிறது. ஆயினும், இது தான் மூல ஊற்றுக்கண் என்று அறுதிசெய்ய இயலாது.

தலைக்காவிரி என்பது காவிரிக்கு மூலமாயினும், தலைக்காவிரிக்குரிய ஊற்றுக்கண்கள் இழையோட்டமாக ஊறிவரும் - நுண்ணியவாய் ஊறிவரும் பல ஊற்றுக் கண்களே அதுபோன்று அவையிடை வெல்லுதற்கு முன்னும் சில பல சான்றுகள் இருந்து நம் கைக்குக் கிடைக்காமற் போயிருக்கும். -

கிடைத்துள்ள அளவில் பனம்பாரனார் வாய் மொழியே பட்டிமண்டபத்தின் ஊற்றுக்கண் ஆகிறது. இவ் ஆற்றுக்கண்ணின் காலத்தைத் தொல்காப்பியர் காலம் கொண்டு கணிக்கலாம்.

ஊற்றுக் கண்ணின் காலம்

தொல்காப்பியர் காலத்திற்கு நச்சினார்க்கினியர்

உரை விளக்கம் முதல் சான்றாகக் கிடைக்கிறது அவர் தொல்காப்பியப் பாயிர உரையில்,