பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சொற்போர் வடமொழி இலக்கியங்களில் வாத வித்தை தர்க்க வித்தை எனப்படுகிறது. வாதம் புரிவதற்கு ஏற்ற அமைப்பு பரிஷத் எனப்பட்டது மனுதர்ம சாஸ்திரம் மகாபாரதம், ஸ்கந்தபுராணம், கவுதம தர்ம குத்திரம், ராமாயணம் யாக்ஞவல்கிய சம்ஹிதை என்பன வற்றில் வாதவிதிகள் பேசப்படுகின்றன ஆன்விட்சிகி.

என்பதும் வாதத்தின் பாற்படும் எனலாம்.

பவுத்த விநய பிடகத்திலும் லங்காவதார குத்திரத்திலும் சொற்போர் பற்றிய இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே பவுத்த தருக்க இயல் இணைத்து எழுந்தது என்பர் திக்நாகர் தலைசிறந்த பவுத்த தர்க்க வல்லுநர் ஜைன சமயத்தில் பகவதிசூத்திரம் ஸ்தானாங்க குத்திரம் பிரக்ஞாபனா சூத்திரம் ஆகியவற்றில் வாதவிதிகள் தொகுக்கப்பட்டுள்ளன . உமாஸ்வாதி, சித்த சேன திவாகரர் ஜீனபத்திரர், சமந்த பத்திரர், அகனங்கர் ஆகியோர் ஜைனத்தின் ஈடிணையற்ற வாத வல்லுநர்கள். இதிலிருந்து வாதக்கலை நெடுங்காலமாக இந்தியாவில் பயிலப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது . மகமகோ பாத்தியாயசதீஷ் சந்திரவித்யா பூஷணா என்பார் இந்திய நாட்டுத் தருக்கவியல் வரலாறு’ என்னும் நூலில் வாதம்

iii