பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 | பட்டி மண்டப வரலாறு மாறுபட்டுப் (பிணங்கி) பேசப்பட்டாலும் சான்றாண்மை யுடனும் மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் நிகழ்ந்துள்ளது. இது பட்டிமண்டபத்தில் சமயங்கொண்டப ங்கில் சங்கப்பாங்கு இருந்தமையைக் காட்டுகிறது. இதற்குப் பின்னர், மணிமேகலையில்,

. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

  • s * ro பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் #

என்று அறிவிக்கப்பட்டமை கருதப்பட வேண்டியதாகின் றது. “ஒட்டிய சமயம் என்றதும் ஒரு குறிப்பாகும் ‘பாங்கு அறிந்து” என்றது சமயப்பட்டிமண்டப நிகழ்ச்சியில் பாங்கு குறையத் தொடங்கியதால் இஃது ஒர் எச்சரிக்கையாக அமைந்தது. இஃது எச்சரிக்கை என்பதை அடுத்து வரும்.

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்” என்னும் அடி உறுதி செய்கிறது . ஆக, சமயப் பட்டிமண்டபத்தில் ஓரளவில் பேசுவோரும் பெருமளவில் கேட்போரும் ைெற்றம்

இவ்வாறு நிகழ்ந்துள்ளமையை முன்னர்க் கண்ட ஆசிரிய

(சினம்) கொண்டு கலவரம் செய்துள்ளமை புலப்படு:


மாலை காட்டிய நல்லவையில்

செற்றமும் சினமும் சேரா மனத்தோர் முனிவொன்று இல்லோர் மூர்க்கர் அல்லோர்”

என்று எதிர்மறையில் குறிக்கப்பட்டமை இங்கு கொள்ளப்

பட்டு இவர்கள் இல்லாத நல்லவை பின்னர் இவர்கள் இடம்