பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இ. புலவர் கா. கோவிந்தன் படையாவர்க்கு ஆயின், அந்நாடு, அவர் பிறந்த நாடு; ஆகவே, அந்நாட்டின்மீது இயல்பாகவே பற்றும் பாசமும் உடையவராகிய அவர்கள், அப்படை புகுந்ததன் செய்தி கேட்ட அக்கணமே அது காக்க விரைந்து விடுவர் ஆதலின், அவர்கள் அது குறித்த அரச ஆணையை எதிர் நோக்கி நிற்பதோ, அவன் அளிக்கும் பெருஞ்சோறு உண்ட பின்னரே, போர் நினைப்பு உற்று, அச்சோற்றுக் கடன் கழிக்க என்றே களம் புகுவதோ செய்யார் ஆதலின், அவர்க்கு அந்நிலையில் பெருஞ்சோறு அளிப்பது என்பது இயலாத காரியமாம். ஆக, இந்நிலை கொண்டு நோக்கிய போது, போர்க்களம் புகுவதன் முன்னர்ப் படை யாளர்க்குப் பெருஞ்சோறு அளிப்பது, மண்ணாசை உடைய மன்னனுக்குப் பொருந்தாது. அவ்வாறே, மண் ஆசை கொண்ட மன்னவன், தன் படையாளர்க்குப் பெருஞ் சோறு அளிப்பது, ஏனாதி முதலாம் பட்டங்கள் வழங்குவது போலும் நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் செயல் முறைகளின் இன்றியமையாமையினை உணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் அம்மண்ணாசைக்குரியான் செயல், முறைகளைத் தொகுத்துக் கூறும் முற்பகுதியில் "கொடுத்தல் எய்திய கொடைமை" என்ற தலைப்பில் அதைக் கூறியுள்ளார். ஆகவே, ஈண்டுக் கூறப்பெறும், "இப்பெருஞ் சோற்று நிலையும் அவன் செய்யும் அவ்வினையையே குறிப்பவாகும் எனல் கூறியது கூறலாகிக் குற்றம்படும். ஆசிரியர் அக்குற்றம்படச் சூத்திரம் ஆக்கார் ஆதலின், இப்பெருஞ் சோற்று நிலை, அவன் தன் படையாளர்க்குப் போர் தொடுத்துப் போவதன் முன்னர் வழங்கும் குறிப்பினைக் குறிக்காது. மண் காக்க விரைந்து, அவ்வினையில் வெற்றி கண்ட வேந்தன், அது வெற்றி