பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இ. புலவர் கா. கோவிந்தன் எனக், கொற்றவைக்கு வெற்றி வீரர் மேற்கொள்ளும் பலி தரு விழா விளக்கும் பதிற்றுப் பத்துச் செய்யுளினையே இரு உரையாசிரியர்களும் தந்துள்ளமையும் உணர்க. இத்துறை அந்நிகழ்ச்சியையே குறிப்பதாகக் கொண்டாலும், அந் நிகழ்ச்சியும் வெற்றிக்குப் பின் நிகழ்ச்சியே ஆதலின், இத்துறை, மண்ணுக்கு உரிய மன்னவன் செயலைக் குறிப்பதே அல்லது, மண்ணாசை கொண்ட மன்னவன் செயலைக் குறிப்பதாகாது என்றே கொள்க. இப்பொருளமைதி நிலையுணராது ஈண்டுக் கூறிய எல்லாத் துறைகளுமே இருவரசர்க்கும் உரியவாம் எனக் கொண்டு பொருள்கூறும் நச்சினார்க்கினியர் வழியினைப் பின்பற்றி, இதை வெற்றிக்கு முன்னான வினையாகவே கொண்டுள்ளார் பு:வெ. மாலையாரும். நிற்க. நாடு காக்கும் போரில், சிலர் உயிரிழந்து போவதும் உண்டு ஆதலின், வெற்றியோடு வீடு திரும்பும் வேந்தனும், வீரர்களும் அவ்வீழ்ந்த வீரர்கள் நாட்டிற்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டியும், அவர்கள் இறவாப் பெருநிலை பெறுவான் வேண்டியும், பிண்டம் இட்டு அவர்தம் நினைவு விழாவினைக் கொண்டாடுவதை, முதற்கண் மேற்கொள்வர். "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியம் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல் கூளிச்சுற்றம் குழிஇ இருந்தாங்கு" அகம்:233. என்ற பாட்டில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் செய்த வீரர் வழிபாட்டுச் சிறப்பினை, மாமூலனார் பாராட்டி யிருப்பது காண்க. அத்தகைய வீரர் வழிபாட்டினைக் குறிப்பதாகக் கோடலும் உண்டு.