பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 139 வென்றோர் விளக்கம்: "வென்றோர் மாட்டு உளதாகிய விளக்கம்" என்பது இளம்பூரணம். "அங்ங்ணம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு-அஞ்சிக் கருமச் சூழ்ச்சியால் திறை கொடுப்ப அதனை வாங்கி னார்க்கு உளதாகிய விளக்கம்” என்பது நச்சினார்க்கினியம். உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மறைவு, அவனுக்குப் பின் சோணாட்டு அரசுகட்டில் ஏறிய கரிகாற் பெருவளத்தான் இளமை, அந்நாட்டு ஆட்சியைத் தாம் கைப்பற்றிக் கொள்ளத் தாயத்தார் அவனுக்கு எதிராக மூட்டிய உள்நாட்டுக் குழப்பம், கரிகாலன் தனிமை ஆகிய இவற்றைப் பயன்கொண்டு சேர, பாண்டிய இருபேரரசர் களும், வேளிர் என வழங்கப்படும் குறுநில மன்ன்ர் பதினொருவருமாகக் கூடிச் சோணாட்டை வென்று தமதாக்கிக் கொள்ள அந்நாட்டின் மீது போர் தொடுத்து வந்தாராக, அவர்களை வெண்ணி வாயில் எனும் இடத்தில் தடுத்து நிறுத்திப் போரிட்டு வென்ற கரிகாலனின் கன்னிப் போர் வெற்றி கண்டு, "பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்துர் ஆர்ப்பினும் பெரிதே' என்ற பரணர் பாராட்டும் (அகம்: 246), "ஆளிநன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்