பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இ. புலவர் கா. கோவிந்தன் இனி, இத்தழிஞ்சி என்னும் துறை தன்னோடு போரிடும் வீரர் கைப்படை இழந்து நிற்கும் நிலையினையும், போரிட மாட்டாது தோற்றுப் புறமுதுகு காட்டி ஒடும் நிலையினையும் பயன் கொண்டு, அவர் மீது படைக்கலம் ஏவி அவரை அழிப்பது சிறந்த வீரர்க்கு இயல்பாகாது என்பதை உணர்ந்து, அந்நிலையில் அம்பு ஏவ எண்ணா ஆண்மையினைக் குறிப்பதாகும் என்று கூறுகிறார் பு:வெ. மாலையார். "அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஒச்சாக் கழிதறுகண்மை காதலித்து உரைத்தன்று” என்று அவர் கூறும் துறை விளக்கம் காண்க. களம் புகுந்து போராடும் நிலையில் பகைவர் மாட்டு ஒரு சிறு கண்ணோட்டம் தானும் காட்டாது அருஞ்சமர் ஆற்றுவதும், அவ்வாறு போர் புரியும் போது, பகைவனுக்குப் பிறிதொரு வகையால் போராடமாட்டாத் தளர்ச்சி வந்துறின், அவன் படையைச் சார்ந்த அவன் நண்பரினும் விரைந்து ஒடித் துணை புரிவதும், ஒரு வீரனுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளாம் எனினும், "பேராண்மை என்ப தறுகண்: ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு", அது போர்க்களத்தில் ஒரு வீரன் காட்டும் பேராண்மையைப் புலப்படுத்தி, "ஒருவன் தாங்கிய தனி நிலை" என்னும் துறையின் பாற்பட்டு விடுமாதலின், அந்நிகழ்ச்சியைத் "தழிஞ்சி"யாகக் கொள்வது பொருந்தாது. நச்சினார்க் கினியரும் இதுவே கூறுவர். மண் ஆசை கொண்டு வருவான் செய்யும் போர், அவன் ஆசை கெட அவனை வென்று தன் மண் காக்கச் செல்வான் செய்யும் போர், ஆகிய இரு போர்களிலும், முன்னையப் போர் அறத்தொடு படா அழிவுப் போராக, பின்னதே, அறத்தொடுபட்ட ஆக்கப் போர் ஆதலின்,