பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 153 நாட்டை அடுத்த மேலைக் கடலில் மறையும் ஞாயிறு, சேரலாதனுக்கு உரித்தாய கடலில் தோன்றும் ஞாயிறு, அவனுக்கு உரிய கடலிலேயே மறையும் மாண்புடைய தாகும் என்று பாராட்டப் பெறுமாறு பரந்து அகன்ற பேரரசு உடையவன் நீ!” எனச் சிறப்பு வகையால் பாராட்டியுள்ளார். - “நின்கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும் நின் வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருக!" -புறம்: 2 கடைச் சங்கப் பெரும் புலவராகிய கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாராட்டுங்கால், "உலக அரசர் அனைவரும் வந்து தாள் பணியும் பேரின்ப வாழ்வினைப் பெற விரும்பியதனால் இவ்வுலகம் அனைவர்க்கும் பொதுவாகும் என்ற பொதுவுடைமைப் பேச்சினைக் கேட்கப் பொறாது, இருந்து ஆளும் நாடு, நனி மிகச் சிறிது, நனி மிகச் சிறிது என்ற நினைப்பு உள் இருந்து ஊக்கம் ஊட்டித் துரத்த, மடங்கா உள்ளம் உடைமையாய், மாற்றார்க்குரிய மண்ணை யெல்லாம் வென்று உரிமை யாக்க வல்ல பெரும் படை உடையாய்!” எனப் பெயர் கூறிப் பாராட்டியுள்ளார். - "வையங் காவலர் வழி மொழிந்து ஒழுகப் போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறாஅது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்து அடுதானைச் சேரலாதன்!” -புறம் 8. பாலைக் கெளதமனார் பாடிய பதிற்றுப்பத்தின் பதிகம், பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாராட்டுங்கால், தன் போர் யானைகள், மேற்குக் கடலும் கிழக்குக்