பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இ. புலவர் கா. கோவிந்தன் ஆனிரை கவரும் நிகழ்ச்சிக்கு அளித்து விட்டமையால், அதை மீட்கும் நிகழ்ச்சிக்குக் கரந்தை என்ற வேறு பெயரை இட்டது போலவே, மண்ணாசை மிக்க மன்னனை வென்று வீறு கொள்ளும் வேந்தன் செயலுக்கு ஆசிரியர் வழங்கிய வஞ்சி என்ற பெயரை, அம்மண்ணாசை மிக்கான் செயலுக்கு அளித்து விட்டமையால், அவனை அடக்கு வோன் செயலுக்குக் காஞ்சி என்னும் வேறு பெயர் இட்டு வழங்கியுள்ளார்கள் பிற்காலப் புறப் பொருள் ஆசிரியர்கள். ஆனிரை காரணமாக நிகழும் போர்கள் இரண்டு, மண் காரணமாக நிகழும் போர்கள் இரண்டு. அரண் காரணமாக நிகழும் போர்கள் இரண்டு, ஆற்றல் காரணமாக நிகழும் போர்கள் இரண்டு எனத் தமிழகத்துப் போர்கள் எட்டு வகைப்படும் என்பதே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்து ஆகுமாயின், அவற்றைத் தனித்தனியே விளக்கி, அவற்றிற்குத் தனித் தனியாகப் பெயர் சூட்டியிருப்பர். ஆனால், அவ்வாறு எட்டாகக் கொண்டு எட்டுப் பெயர் சூட்டாமல், நான்காகக் கொண்டு, நான்கு பெயரே சூட்டியுள்ளமையால், அவர்க்கு அது கருத்து அன்று என்பது புலனாகும்; வெட்சித் திணையினை விளக்கும் சூத்திரத்திலேயே, கரந்தை என்ற அதற்கு மறுதலைத் திணைப் பெயரைத் தந்திருப்பதையும், அது போலவே, உழிஞைத் திணையினை விளக்கும் குத்திரத்திலேயே அதற்கு மறுதலைத் திணைப் பெயராகிய நொச்சி என்பதைத் தந்திருப்பதையும் நோக்கின், ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும், போர் எட்டு, வகைப்படும் என்பதே கருத்தாம் என்று கூறுவாரும் உளர். ஆனால், அதுவே அவர் கருத்து ஆகுமாயின், வெட்சியில், கரந்தைப் பெயரை அளித்ததைப் போலவும், உழிஞையில் நொச்சிப்