பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 183 தாமாகவே ஆக்கும் முறையினை அறிந்து கொண்டா ரல்லர். அதனால், அரண்களைத் தாமாகவே ஆக்கிக் கொள்வதற்கு மாறாக, அரண்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் இடந்தேடித் தங்கள் வாழிடங்களை வகுத்துக் கொண்டார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அரண் உள்ள இடங்களில், தங்கள் வாழிடங்களை வகுத்துக் கொள்வதால், அரண் தேடிக் கொண்டோம் என்ற ஒரு அமைதி தவிர்த்து, தங்கள் வாழ்க்கைக்காம் வளங்களைத் தேடிக் கொள்வதில் எண்ணிலா இடையூறுகள் இடம் பெறக் கண்டனர். அதனால், வாழ்வை வளர்க்கும் இடங்களில் வாழிடங்களை அமைத்துக் கொண்டு, அத்தகைய இடங்களுக்காம் அரண்களைத் தாமாகவே ஆக்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். இவ்வாறு, அரண் அமைந்த இடம் தேடி வருவதற்குப் பதிலாக, தாமிருக்கும் இடத்தையே அரணுடையதாக ஆக்க முனைந்த அந்நிலையிலும், கல்லும் இட்டிகையும் கொண்டு. மதில் எழுப்பும் அறிவு வாய்க்கப் பெற்றாரல்லர். அதனால், அக்காலை அவர்கள் அமைத்த அரண்களெல்லாம், பகைவரோ, பகைவரின் நாற்படைகளோ எளிதில் ஊடறுத்துப் போகலாகா மரம் செடி கொடிகளைத் தம் வாழிடங்களைச் சுற்றி வளர்ப்பதையே அரணாகக் கொண்டனர். காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிக னார் மகனார் நப்புதனார் தாம் பாடிய முல்லைப் பாட்டினுள், காட்டகத்தே, முள்வேலி மரங்களையே மதிலாகக்கொண்டு அமைக்கப் பெற்ற பாடி வீட்டினையே பாராட்டியிருப்பதும், “காட்ட, இடு முட் புரிசை ஏமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" (முல்லைப் பாட்டு: 26- 28), அதியமான் நெடுமானஞ்சியின் குதிரைப்