பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ 187 கொண்டு வந்து காத்தலே வெட்சி எனவும், "மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுகத் தலை சென்று அடல் குறித்தன்று” என மண் ஆசை கொண்டு வந்த மன்னனை மண்ணுக்கு உரியான் அழித்து வெற்றி கொள்வதே வஞ்சி எனவும், அழிவுப் போர் புரிவாரை அழித்து அறப் போர் புரிந்தாரைப் பாராட்டுவதே செய்த ஆசிரியர் தொல் காப்பியனார், ஈண்டு மட்டும் அழிவுப் போர் புரிவானையே பாராட்டியுள்ளார் என்பது பொருந்தாது. ஆகவே, முற்றலும் கோடலும் ஆகிய இருவினைகளும், வந்த வேந்தன் என்ற ஒருவன் வினைகள் ஆகா; முற்றல் வந்தவன் வினையாக, கோடல் அரணுக்கு உரியான் வினையாக இருவர்க்கும் உரிய இருவேறு வினைகளே ஆகும் என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர், "முற்றலும் கோடலும்” என்பதற்குச், 'சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலும்” எனப் பொருள் கொண்டிருப்பதும் காண்க. மேலும் இத்திணையின் விளக்கம் உரைக்கப் பின் வரும் இரு சூத்திரங்களிலும், முற்பகுதிகள் வந்தோன் செயல்களைக் குறிப்பனவாக, பிற்பகுதிகள் அரணுக்கு உரியோன் செயல்களைக் குறிப்பனவாம் என்பது அவ்விரு சூத்திரங்களையும் நுணுகி ஆராய்வார்க்குப் புலனாதலும் அறிக. ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்டதுபோல், இவற்றை அழிவுப் போர்கள் மேற்கொண்டு வந்தார்களை வென்று ஒட்டிய வேந்தர் செயல்களைக் குறிக்கும் மூன்று திணைகளாகக் கோடல் பொருந்துமே யல்லது, பிற்கால ஆசிரியன்மார் கொண்டது போல் ஆக்கப் போர் செய்தார் நிகழ்ச்சிகளைப் போலவே, அழிவுப் போர் நிகழ்ச்சி களையும் விளக்கும் ஆறு திணைகளாகக் கோடல்