பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 221 வேண்டுதலானும். பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று" என்றும் காரணம் காட்டியுள்ளனர். பண்டைத் தமிழர்கள் மேற்கொண்ட போர், இத் தும்பைப் போர் ஒன்று மட்டுமே அன்று; ஆனிரை, நாட்டு எல்லை, அரண் என இவைபோலும் காரணங்கள் கருதி வேறுபல போர்களும் அவர்கள் மேற்கொள்வது உண்டு. அவற்றுள் ஆனிரை காரணமான போர், அது இயங்கும் இடமாம் மலை நாட்டகத்திலேயே நடைபெறும். அது போலவே அண்டை நாட்டு மண் பற்றிய போர் அந்நாட்டு எல்லைப்புறங்களில் மட்டுமே நிகழும். நாட்டு எல்லை காடே ஆதலின், அப்போர் நிகழ் இடம் காடே ஆகும். அரண்போர், அரண் மிக்க இடந்தேடி வைத்துக் காக்க வேண்டிய அரியநிதி மிகுந்த இடத்திலேயே நிகழும். அந்நிதி, நகரங்களிலேயே ஈட்டப்படும். அத்தகைய நகரங்கள், வயல் வளம் சார்ந்த ஆற்றங் கரைகளிலேயே இடம் பெறும். அதனால் அரண் போர் நிகழும் இடம், செந்நெல்லும், கரும்பும் சிறக்க விளையும் நன்செய்கள் மலிந்த மருதநிலமே ஆகும். ஆக, பண்டைத் தமிழகத்துப் போர்கள் களரும் மணலும் பரந்த கடலைச் சார்ந்த நிலத்தில் மட்டுமே நிகழவில்லை. நாட்டிலும் நடைபெற்றன; மலையிலும் நடைபெற்றன; கழனிகளுக்கிடையேயும் நடைபெற்றன. போர் நிகழ்தற்காம் காரணமும் சூழ்நிலையும், எங்கு எப்போது உண்டாகி விடுகின்றனவோ, அங்கு அப்போதே அது நடைபெற்று விடும். "போர் நிகழ்தற்கேற்ற இடம் இது அன்று; அதற்கேற்ற பொழுதும், இது அன்று; ஆகவே, போரிட வேண்டிய நிலை பிறந்துவிட்ட போதிலும், அது நிகழ்தற்கேற்ற இடம் தேடிச் சென்று போரிடுவோம்!” என்று, போராடும் வீரர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு