பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

公签 பண்டைத் தமிழர் போர் நெறி இ. 225 கடற்கரை நிலமாம் என்றும், ஆகவே இருபெரு வேந்தர் ஒரு களத்துப் போரிடும் நிகழ்ச்சியைக் குறிப்பதாகிய தும்பை என்ற புறத்திணை, நெய்தல் என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று என்ற அவர்கள் உரை, பொருளொடு பொருந்தாப் புல்லுரையேயல்லது, பொருளொடு பொருந் தும் பொன்னுரை அன்று என்பது விளக்கியவாறாயிற்று என்க. நாற்புறமும் நீரால் சூழ்ந்த ஒரு பெருநிலப் பரப்பில், ஒரு பகுதியிலிருந்தாளும் அரசன் ஒருவன், தன் ஆற்றலை நிலைநாட்டும் நினைப்பு ஒன்றே கருதித் தன் அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லினும், போரில் பெற்ற வெற்றியின் பயனால், அந்நாடுகளும் படுபொருள்களும் அவன் உடைமையாகி விடுவதும் உண்டு. அதனால் மண் கருதாப் போராகத் தொடங்கியது, முடிவில் மண் பற்றியதாகி விடுவதும், தொடக்கத்தில் பொருள் கருதித் தோன்றாத போர் முடிவில் பொருள் குறித்த போராக மாறி விடுவதும் உண்டு. ஆனால், வெற்றிப் புகழ் கருதிய ஒருவன் அப்புகழைக் கடல் கடந்த நாடுகளில் மேற்கொள்ளக் கருதி, ஆங்குச் செய்யும் போர்கள் அவ்வாறு மண்ணாசை உடையவாகவும் மாறிவிடுவது பெரும்பாலும் நிகழ்வ தில்லை. ஆங்கு அவன் பெற்ற வெற்றியின் பயனாய் அந்நாட்டின் மண்ணும் பொன்னும் அவன் உடைமை களாகி விடினும், அவற்றைத் தானே ஆட்சி கொள வேண்டின் அதற்குப் பெரியதோர் அரசமைப்பு வேண்டி யிருக்கும்; கடல் கடந்த நாட்டில், அத்தகைய ஒரு பெரிய அரசமைப்பினை நிலை நிறுத்துவதால் ஆக்கத்தினும் கேடே அதிகமாம் என்ற அரசியல் உண்மையை உணர்ந்து அரசர்கள் அத்தகைய நிலையினை விரும்புவாரல்லர். ப.த.போ.நெ-15