பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இ. புலவர் கா. கோவிந்தன் அதனால், கடல் கடந்த நாடுகள், மன்னர்களின் மண்ணாசை பொன்னாசைகளை நிறைவேற்றித் தரும் நிலைக்களங்களாவது பெரும்பாலும் இல்லை. மாறாக அம்மன்னர்களின் மங்காப் புகழாசையினை நிறைவேற்றித் தரும் நிலைக்களங்களாதலே இயற்கையோ டியைந்த நியதியாகும். தொடக்கத்தில் போர்ப் புகழ் ஒன்றே குறிக் கோளாகக், கடல் கடந்த நாடுகளில் சென்று போரிடு வாருள்ளும், பலர் மண்ணாசையும், பொன்னாசையும் உடையவராக மாறி விடுவதும் உண்டு. என்றாலும், தாம் தொடக்கத்தில் மேற்கொண்ட குறிக்கோளில் ஒரு சிறிதும் பிறழாமல் இருந்து வெற்றிப் புகழ் ஒன்றே கொண்டு மீள்வோரும் ஒரு சிலர் உள்ளனர். வெற்றி கொண்ட நாடேயாயினும், தம் தாய் நாட்டை விடுத்து, அவ்வயல் நாட்டு அரச வாழ்வை, ஒரு சிலர் தவிர்த்துப், பெரும் பாலோர் விரும்புவதில்லை. அதனால் ஆண்டு அரசமைத்து ஆளாது, ஆங்குப் பெற்ற வெற்றிப் புகழ் ஒன்றை மட்டுமே கொண்டு மீண்டு விடுவர். ஆகவே வெற்றிப் புகழ் ஒன்றே கருதி நிகழும் போர், கடல் கடந்த நாடுகளில் மட்டுமே நிகழும் என்க. ஆகவே மைந்து பொருளாகப் போர்தொடுத்து வருபவன் கடல் கடந்த நாட்டினன் ஆதலும், அவ்வாறு வருவோனை வென்று ஒட்டும் வேந்தன், அவனோடு தொடுக்கும் போர், அவன் தன்நாட்டு மண்ணில் அடியிட்ட அந்நிலையே தொடங்கி விடுவதும், வந்தவன், தான் கருதி வந்ததை மறந்து, தான் ஊர்ந்து வந்த கலம் ஏறிக் கடல் புக்க பின்னரே அப்போர் முடிவுறுதலும் இயற்கையொடு பட்ட நிகழ்ச்சிகளாகும்; ஆகவே, மைந்து பொருளாக நிகழும் போரினைக்