பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 235 களுக்குத் தெரிதல் கூடாதே என்ற அச்ச உணர்வால் நல்விலங்குகளும் கரந்துறை வாழ்வை விரும்புகின்றன. அவ்வின்ங்களின் அவ்விருப்பங்கள் இரண்டுமே முறை யானவைதாம் என்பதால், கரந்துறை வாழ்வு, அவற்றிற்கு இயற்கையிலேயே வாய்க்கும் வகையில் அவற்றின் உடலமைப்பு முறை அமைந்துள்ளது. அவ்வுயிரினங்கள் வாழும் நிலத்திற்கும், அவற்றின் உடலின் புறத்தோற்றத் திற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் தோன்றா வகையில், அவை வாழும் நில இயல்பிற்கேற்ற நிறம் உடையவாய் அவற்றின் தோல் அமைந்துளது. - உயிரினங்களுக்கு இயல்பாக அமைந்திருக்கும் இத்தற்காப்பு வகைகளைப், போராடப் போகும் வீரர்கள் தாமாகவே ஆக்கிக் கொள்வார்கள். ஒருவன் எவ்வளவு தான் ஆற்றல் மிகுந்தவனாயினும், பகைவன் மீது பாய்வதற்கு முன்பே, தன் போர்க் கோலத்தைப் பகைவன் கண்டு கொள்ள விரும்புவானல்லன். "கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும்,” என்றார் வள்ளுவர். அவன் முன்பே கண்டு கொண்டால், தாக்கும் தன் கருத்தனைத்தும் கருவிலேயே கருகிவிட நேரிடும்; ஆதலின் பகைவனைத் திடுமெனத் தாக்கும்வரை, தன் முயற்சிகளை மறைத்து வைக்கவே விரும்புவன். அது போலவே, தாக்கப்படும் வீரனும் பகைவனால் எளிதில் தாக்கப்படா வகையில் தன் நடமாட்டங்களை மறைத்து வைக்கவே விரும்புவன். இதனால் பகைநாட்டைத் தாக்கி அழிக்க முன்னேறிப் போகும் படை, அப்படை வரவை எதிர்நோக்கிக் காத்து நிற்கும்படை ஆகிய இரண்டுமே, ஒன்றன் நடமாட்டத்தை ஒன்று கண்டு கொள்ளா வகையிலேயே மேற்கொள்ளும். அதனால் தொலைவிலிருந்து நோக்குவார்க்கு, அது ஒரு