பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 237 மறவர் கொண்டு சென்ற ஆனிரையை மீட்டுக் கொணரும் போரே பாராட்டற்குரியது என்பதால், அதற்கு வெட்சி என்ற பெயர் சூட்டியும், மண்ணாசை கொண்ட மன்னன் கைப்பற்றிய மண்ணை மீட்கும் போரே பாராட்டற்குரியது என்பதால் அதற்கு வஞ்சி என்ற பெயர் சூட்டியும், ஆற்றல் அழிக்க எண்ணி வளைத்துக் கொண்ட அரண் முற்றுகையினை முறியடிக்கும் போரே பாராட்டற் குரியது என்பதால், அதற்கு உழிஞை என்ற பெயர் சூட்டியும் பாராட்டியது போலவே, ஈண்டும் ஒருவன் ஆற்றலுக்கு நேர இருந்த மதிப்புக் குறைபாட்டினை மாற்றி, அதன் மதிப்பினை உயர்த்த மேற்கொள்ளும் போரே பாராட்டற்குரியது ஆதலின், அதற்குத் தும்பை எனும் பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளார், ஆசிரியர் தொல் காப்பியனார். ஆசிரியர் தொல்காப்பியனார் காட்டிய முறையே கருத்துச் செறிந்த முறையாகவும், ஐயன் ஆரிதனார் போலும் பிற்கால ஆசிரியர்கள், அவர் சென்ற வழிச் செல்லாது, முன்னர்க் கூறிய மூவகைப் போர்களையும், ஒன்று கவர, மற்றொன்று மீட்க என, ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பகுதிகள் உடையவாகக் கொண்டு, ஆனிரை கவர்தலை வெட்சி என்றும், அது மீட்டலைக் கரந்தை என்றும், மண் கவர்தலை வஞ்சி என்றும், அது மீட்டலைக் காஞ்சி என்றும், அரண் முற்றுகையினை உழிஞை என்றும், அது மீட்டலை நொச்சி என்றும் பெயர் சூட்டி ஆறு போர் நிகழ்ச்சிகளாகக் கொண்டார்கள். அவ்வாறு கொள்வது, இயற்கைப் போர் முறைகளுக்குப் பொருந்தாது என்பதும், ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்ட முறையே பொருந்தும் முறையாம் என்பதும்,