பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இ. புலவர் கா. கோவிந்தன் தம் ஆண்மையை நிலைநாட்டக் களம் புகும் போர் மறவர்கள் நாற்படைகளும் தம்மைச் சூழ்ந்து கொண்டு, வாள் கொண்டும் வேல் கொண்டும், வில்லும் அம்பும் கொண்டும் தாக்க, வாள்பட்ட புண்கள் உடலெலாம் காட்சி அளிக்கினும், காணும் இடம் எங்கும் கருக்குகளே காட்சி அளிக்கும் பனைமரம் போலவும், உடலெலாம் முள் முளைத்துக் கிடக்கும் முள்ளம் பன்றி போலவும் காட்சி அளிக்குமாறு பகைவர் வீசிய வேல்களும் அவர்தம் வில்களிலிருந்து விரைந்து வெளிப்படும் அம்புகளும் உடலெலாம் பாய்ந்தாலும் கலங்காது கடும் போர் செய்வதையே விரும்புவர். அத்தகைய வீரர் சிலரையும், புலவர்கள், நமக்கு அறிமுகம் செய்து பாராட்டி யுள்ளார்கள். போர்க்களத்தில் குறியவும் நெடியவுமாகப் பகை வர்கள் எறிந்த வேற்படைகள் பலவும் தன் மார்பில் பாயப்பெற்று, எருமையின் கரிய பெரிய கொம்புகளோ என மருளுமளவு பருத்த பயற்றின் நெற்றுகளை அடித்துப் பயிற்றினைப் பிரித்து எடுத்துக் கொண்டு கழித்து விடப் பட்ட சக்கைக் குவியலைப் படுக்கையாகக் கொண்டு காட்டுப் பசு தன் கன்றோடு கிடந்து உறங்குமளவு வளம் சிறந்ததேயாயினும், அது வன்னிலத்துச் சிற்றுார் ஆதலின், போர்க்களத்தில் குறியவும் நெடியவுமாகப் பகைவர்கள் எறிந்த வேற்படைகள் பலவும், தன் மார்பில் பாயப்பெற்று, அடிமுதல் முனைவரையும் கருக்கு மட்டைகளைக் கொண்ட வலிய பெரிய பனைபோல் காட்சி அளிக்கும் நிலையிலும் கலங்காது நின்று போரிட்டு வெற்றி பெற்ற வீரனுக்கு அது, பரிசுப் பொருளாதல், தகுதியுடையதன்று எனக் கருதி, நீர்ப் பறவைகள் கூட்டங் கூட்டமாக வந்து கூடு