பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 253 வரிசையில் நின்றும், பகைப்படை பாய்ந்து வருங்கால், அப்படையால் தன் படையின் முன் அணி கெட்டழியா வாறு காத்தற் பொருட்டு, வெள்ளம் பெருகிப் பாயும் பேராற்றின் இடையில் கிடந்து அவ்வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் அணைபோல், பகைப் படையின் முன் நின்றும் போராடும் பெருமை வாய்ந்த பிட்டங் கொற்றன், இத்துறை வீரனுக்கு நல்ல சான்றாகுவன். "நும்படை செல்லுங்காலை அவர்படை எடுத்தெறி தானை முன்னரை எனாஅ அவர்படை வரூஉங்காலை நும்படைக் கூழை தாங்கிய அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ அரிதால், பெரும! நின் செவ்வி." -புறம்: 169. பு.வெ. மாலையார் இதற்கு எருமை மறம் எனப் பெயர் சூட்டியுள்ளார். ஏமம்: பகைப் படையால் தாக்குண்டு தன் படை பின்னிடாவாறு முன்னின்று தன் படையைத் தாங்கியும், தன் படை வரிசையுள் தானே முன் நின்று பகைப் படையைத் தாக்கியும் வெற்றி காண்பதில் கருத்துடைய ஒரு வீரன், அதற்குத், தன் கையில் ஏந்தி நிற்கும் வில் அம்புகளின் வன்மையை மட்டுமோ, வேல் வாட்படைகளின் திண்மையை மட்டுமோ நம்பிப் பயனில்லை. அவை பகைவர் படை வன்மையால் பாழுற்றுப் போகும் நிலையிலும், தான் கருதியதை முடிக்கவல்ல மெய்யாற்றல் அவன்பால் அமைந்திருத்தல் வேண்டும். அத்தகைய ஆற்றல் வாய்ந்த ஒருவனால் மட்டுமே வெற்றிப் புகழை