பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 இல் புலவர் கா. கோவிந்தன் இயற்பெயர்க்கு முன்னர், ஒல்லையூர் தந்த என்ற சிறப்படை தந்தும், தமிழகத்தை வென்று அடிமை கொள்ள எண்ணித் தமிழக எல்லைக்கண் பாடி கொண்டிருந்தவாறே, தமிழக அரசர்க்குத் தொல்லை பல தந்து வந்த வடவாரியப் பெரும் படையைப் பாழ் செய்து துரத்தித் தமிழக எல்லை காத்த நெடுஞ்செழியனை, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எனப் பெயரிட்டு அழைத்தும், வேளிர் குல வேந்தர்களின் விழுநிதி வைத்துக் காக்கப் பெறும் இடமாகவும், இயற்கை, செயற்கை ஆகிய இருவகை அரண்களையும் ஒருங்கே பெற்றதும், பல சிற்றரசர்களும், பேரரசர்களும் முயன்றும் கைப்பற்ற முடியாப் பெருங்காவல் உடையதும், இறுதியில், தமிழகத்திற்குக் கேடுபுரியும் கருத்துடையோராகிய வம்ப வடுகராம் கோசர் ஆட்சிக் கீழ் வந்துற்றதும், தன் குலத்து முன்னோர் பலர் முயன்றும் கைப்பற்ற மாட்டாக் களங்கத்தைத் தன் குலத்திற்குத் தந்து வந்ததுமான, பாழி நகரை வென்று அழித்த இளஞ்சேட் சென்னி என்ற சோழன் பெயரோடு, செருப்பாழி எறிந்த என்ற சிறப்பை இணைத்தும், கடல் இடைச் சிறு நாடுகளை வாழ் விடமாகவும், அக்கடலையே அரணாகவும் கொண்டு, கடல் வாணிகம் கருதி உரோமம், கிரேக்கம், எகிப்து முதலாம் மேனாடுகளிலிருந்து, தமிழகம் வந்து திரும்பும் . வங்கங்களை வழிமடக்கிக் கொள்ளையிட்டுத் தமிழக வாணிகத்திற்கு ஊறு விளைத்திருந்த கொள்ளையர் கூட்டத்தைத் தன் கடற் படைத் துறையால் வென்று அழித்துக் கடல் வாணிகம் காத்த செங்குட்டுவனைக் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் எனச் சிறப்புற அழைத்தும், தமிழகத்தின் ஆட்சிப் பெருமையை வடநாட்டு ஆரிய மன்னரெல்லாம் அறிந்து மதிக்கும் வகையில், அவ்வட