பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 273 ஆரியர் பலரையும் வென்று, தன் வெற்றியின் அறிகுறியாக, வடஎல்லையாம் இமயப் பெருமலை மீது, தன் குல இலாஞ்சனையாம் வில்லைப் பொறித்துத் தமிழகம் மீண்ட விழுமியோனாகிய நெடுஞ்சேரலாதனை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என நெஞ்சார வழுத்தியும், தன் இளமையையும், படைச் சிறுமையையும், அவர்களின் முதுமையையும் படைப் பெருமையையும் பயன் கொண்டு பாண்டி நாடு வென்று, அப்பாண்டியர்க்குப் பெருமை தரும் பொதிய மலைச் சந்தனத்தையும், கொற்கைத் துறை முகத்தையும் கொள்ளையிட்டுச் செல்லும் கள்ள உள்ளம் உடையராகி வந்து எதிர்த்த, இரு பேரரசர்கள் ஐந்து வேளிர்கள் என்ற எழுவர்தம் பேரணியைத் தான் ஒருவ னாகவே போராடி முறியடித்து, அவர்களை, அவர்களில் ஒருவனாம் சோழர்க்கு உரிய தலையாலங்கானம் எனும் இடம் வரை துரத்திச் சென்று வென்று வீறு கொண்ட நெடுஞ்செழியனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பெயரால் அழைத்தும், அக்கால மக்கள் ஒருபால் பாராட்ட, "வட வாரியர் படை கடந்து - தென் தமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்." "சோழர் பெருமகன், விளங்கு புகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி குடிக் கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி ப.த.போ.நெ-18