பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 239 விளைந்திருந்த பயிர் வகைகள் நெருப்பிட்டு எரிக்கப் பெறவும், பசு நிரைகள் மேய்ந்த இடங்களில், காட்டுக் கொடு விலங்குகள் உலா வரவும், ஊர் மன்றங்கள் மகளிர் ஆடிமகிழ்ந்த குரவை துணங்கைகளை இழந்து ஒளி இழப்பவும், ஆன்றோர் இருந்த அவைகளில் பேய்க் கூட்டத்தின் ஆட்டம் பெருகவும், அகமும் முகமும் மலர, விருந்தினரை வரவேற்ற மகளிர், மக்களையும் மனை களையும் இழந்து வாய்விட்டுப் புலம்பி அலையவும், வருவார்க்கு வாழ்வளித்த பெருங்குடிச் செல்வர், தம் வளம் இழந்து, வாழ்வு இழந்து, வாழ்விடம் தேடிப் பிறநாடு நோக்கிப் புறப்படவும், நெற்குதிர்கள் எரிந்து கரியாக, பாழுற்ற அவ்விடங்களைக் கோட்டான்கள் தம் வாழ்விட மாக்கிக் கொள்ளவும், எழுநிலை மாடங்கள் இடியுண்டு, கழுதை வழங்கும் கொடுமையவாகவும் கழுநீர் மலர்ந்த பொய்கைகள் கோரை வளரும் பாழுங் குளமாகிப் போகவும், நல்லேர் பல நடந்த நன்செய்கள் பன்றிக் கூட்டத்தின் வாழ்விடமாகிப் போகவும் பாழ்பட்டு, நாடு எனும் பெயர் இழந்து, காடு எனும் பெயர் பெற்றுவிட்ட கொடுமையைப் புலவர் மாங்குடி மருதனார், கண்ணிர் மல்கக் காட்டியுள்ளார். "உறுசெறுநர் புலம்புக்கு, அவர் கடிகாவின் நிலை தொலைச்சி, இழிவு அறியாப் பெருந்தண்டனை குரூஉக் கொடிய எரிமேய நாடு எனும்பேர் காடு ஆக, ஆசேந்த வழி மாசேப்ப, ஊர் இருந்த வழி பாழாக, இலங்குவளை மடமங்கையர் பு.த.போ.நெ-19