பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 53 என்ற சிந்தாமணிச் செய்யுளில், துடிப்பறையொலி கேட்டு அழும் காரியின் செயல் கண்டு, ஆயர் முதுமகன், ஆனிரை கவர அண்டை நாட்டவர் வருவர்; ஆகவே விழிப்பாய் இருந்து காவல் மேற்கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டிருப் பதையும் காண்க. நிரைக்குரிய ஆயர்க்கு நிரை கொள்ளக் கருதும் தம் கருத்தினைப் புலப்படுத்த வெட்சியார் மேற்கொள்ளும் இந் நிகழ்ச்சியையே, "படை இயங்கு அரவம்", "வெட்சி அரவம்" என முறையே பெயர் சூட்டிப் பாராட்டுவர் ஆசிரியர் தொல்காப்பியனாரும், ஐயன் ஆரிதனாரும். பிற நாடு மீது படையெடுத்துச் செல்வான், தன் செயல் குறித்துத் தன் நாட்டு மக்கள் யாது கருதுகின்றனர் என்பதை அறிந்து கோடல் இன்றியமையாததாம். மக்கள் விரும்பாத ஒன்றை மன்னவன் மேற் கொள்ளின், அதனால் அவன் கேடுறுவதல்லது ஆக்கம் பெறான். நாட்டு மக்களின் ஒப்புதல் பெறாத ஒரு செயல், நாடாள்வானுக்கு வெற்றியைத் தராது. ஆகவே, அவர் இசைவினைப் பெறுதல் அரசனின் இன்றியமையாக் கடனாம். அரசன் நாட்டு மக்களை அரசவையில் நிறுத்தி, அவர் ஒப்புதலை வேண்டுவனாயின், அரசன்பால் கொண்டிருக்கும் அச்சம் காரணமாகத் தாம் விரும்பாது போயினும், அவன் செயலுக்கு ஒப்புதல் அளிப்பது போலவே உரைப்பர். அவ்வாறு பெறும் ஒப்பு, உண்மை ஒப்புதல் ஆகாது. ஆகவே, நாட்டு மக்கள் உள்ளத்தை உள்ளவாறு அறிய விரும்பும் அரசன், அம்மக்களிடையே அவர் அறியாவாறு கலந்து நின்று தன் செயல் குறித்து, அவர் கூறுவனவற்றை அறிதல் வேண்டும். அவரும் தான் கருதுவதே கருதுவராயின், அவர் மனம் உவந்து ஒப்பினர் எனக் கொண்டு வினைமேற்