பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆ புலவர் கா. கோவிந்தன் செல்லுதல் வேண்டும். விரிச்சி எனும் துறையினை விளக்க வந்த வெண்பா மாலைச் செய்யுள் இதையே கூறுகிறது. நிரை கொள்ளும் நினைப்பினனாய ஒரு வீரன், மக்கள் மனம் அறிய ஊர் மன்றத்திடையே உருவு கரந்து இருக்குங்கால், ஒருத்தி. அவ்வழிச் செல்லும் வேறு ஒரு வீரனை விளித்து, "பகைவர் நாட்டு மன்றுகள் பாழ்பட, அவர் ஆனிரைகளைக் கொண்டு வந்து நம் மன்று பொலிய நிறுத்துவாயாக!” எனக் கூறி வாழ்த்தினாள். அக்கூற்று, அந்நாட்டு மக்கள் உள்ளமாதல் அறிந்து வினைமேற் சென்றான். எழுவணி சீறுர் இருள்மாலை முன்றில் குழுவினம் கைகூப்பி நிற்பத் - தொழுவில் "குடக்கண் ஆ கொண்டுவா” என்றாள்; குனிவில் தடக்கையாய்! வென்றி தரும் -பு.வெ.மாலை 4. நிரை கொள்ளச் செல்லும் தன் செயலில் வெற்றியும் தோல்வியும், தன் நாட்டு மக்களின் விருப்பு வெறுப்பு களுக்கு ஏற்பவே அமையும்; ஆதலின் அவர் கருத்தைத் தெளிவாக அறிய விரும்பிய வேந்தன். தான் இருப்பதை அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் உரையாடும் காலத்தில்தான், அவர் உள்ளத்தோடு ஒன்றுபட்டு உரைகள் வெளிப்படும்; அவ்வுரைகளிலேயே அவர் உள்ளத்தை உணர முடியும் என்னும் உணர்வுடையனாக அந்நிலைக்கு வாய்ப்பளிக்கும் நிறைந்த இருள் பரவும் மாலைக் காலத்தைத் தேர்ந்து மன்று அடைதலும், மக்கள் அறியாதவாறு மன்றிடையே மறைந்திருக்கும் அம் மன்னவன், ஆண்டு அவர் கூறுவனவற்றைத் திரிபற உணர்வான் வேண்டி, அவர் உரைகளைக் கூர்ந்து கேட்டலும் வேண்டும். மக்கள் உள்ளம் உணர மன்னவன்