பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இ. புலவர் கா. கோவிந்தன் தோளாற்றலில் ஐயப்பாடு கொண்டு தன்னம்பிக்கை இழந்து போன பிற்காலத்திலேயே இடம் பெற்றதாதல் வேண்டும். - - , - நிரை கவரத் துணிந்து, அது செய்தற்காம் நன் னிமித்தமும் வாய்க்கப் பெற்றதும், வெட்சியார் மேற் கொள்வது நிரை நிற்கும் இடம் நோக்கி விரைவதேயாம் என்றாலும், அந்நிரை யாண்டு உளது? அந்நிரையின் அளவு யாது? அதைக் காத்து நிற்கும் ஆயர்களின் பலம் எத்தகைத்து? ஆனிரையை ஒட்டி வர எத்துணையர் தேவை? அதைக் காத்துவர எத்துணையர் தேவை? என்பன போல்வனவற்றை அறிந்து கொள்ள வேண்டுவது இன்றியமையாதது ஆதலின், அதை அறிந்து அறிவிக்கவல்ல ஒற்றர் சிலரை ஆனிரைப் பக்கம் போக்குவதும், அவர்கள் ஆயர் அறியாவாறு சென்று அச்செய்திகளை அறிந்து வந்து உரைப்பதும் ஆகிய (ஒற்று நிகழ்ச்சி) ஆனிரை மேற் கொள்ளச் செல்வதன் முன் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆகவே, "விரிச்சி, செலவே, வேயே, புறத்திறை” என வெண்பாமாலையும், "புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றின் ஆகிய வேயே” எனத் தொல் காப்பியமும் செலவை முன்னாகவும், வேயைப் பின்னாக வும் வைத்துக் கூறினும், வேயை முதல் நிகழ்ச்சியாகவும் செலவைப் பின்னிகழ்ச்சியாகவும் கோடலே செவ்விதாம். ஆனிர்ைகளைத் தம் முல்லை நிலத்தை அடுத்துள்ள குறிஞ்சி நிலத்தே கொண்டு சென்று மேய்க்கும் ஆயர், ஆங்கு அவ்வானிரைகட்கு அழிவு நேராமை கருதித் தம்மோடு ஒரு சிறு படையையும் உடன் கொண்டு செல்வர். ஆனிரை ஒம்பலே தம் தொழிலாம் எனக் கொண்டு வாழ்ந்த கொங்கர் என்ற இனத்தவர், கொற்றம் மிக்கவராகவும்