பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 65 மாலையார்; ஆனால், அதுவும், பாதீடு, கொடை ஆகிய இரண்டனுள் யாதேனும் ஒன்றனுள் அடங்கி விடும்; அவற்றுள் ஏதேனும் ஒன்றின் விரிவே இது எனக் கொண்டமையால், தொல்காப்பியனார் அதை வேறு பிரித்து வழங்கினாரல்லர். பாலை நிலத்து மறவர், பண்டு ஆனிரை கவர்ந்தது. தம் வயிற்றுப் பசியைத் தணித்துக் கொள்வதற்கே யாதலின், அது பொருளாக அந்த வெட்சித் திணைக்கண் பாதீடும் கொடையும், அவற்றின் விரிவுகளாம் புலனறி சிறப்பும் பிள்ளை வழக்கும் துடி நிலையும் இடம் பெறுவது தனிமிகப் பொருத்தம் உடைத்து; அத்திணைக்கண் இவை இடம் பெற்றிருப்பது ஒன்றே போதும். வெட்சித் திணை தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள முனைந்த பாலை நிலத்து மறவர்களின் வேட்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே என்பதை நிலைநாட்ட ஆனால், பகை நாட்டின் மீது போர் தொடுப்போர், அந்நாட்டுப் பசுநிரைகளைப் போர் முடியும் வரையும் பற்றிக் காத்துப் போர் முடிவில் உரியவர்.பால் ஒப்படைத்தல் வேண்டும் என்ற திருப்பம் அத்திணைக்கண் இடம் பெற்றுவிட்ட பின்னர், பாதீடும் கொடையும் ஆகிய அவ்விருதுறைகளோ, அவற்றின் விரிவுகளாம் புலவர் சிறப்பு, பிள்ளை வழக்கு, துடி நிலைகளோ இடம் பெறுதல் பொருந்தாது. அப்புது நிலை புகுந்து விட்ட பின்னர், அதற்கு வழி வகுத்துத் தாம் வழக்கற்றுப்போதலே பொருந்தும். நிற்க, மழை வறண்டு வறுமையுற்றால் இது தெய்வ சோதனை; ஆகவே அத்தெய்வத்தை வழிபடின் வறுமை ஒழியும், வளங் கொழிக்கும் என வழிபடுதலும், மழை பெய்யப் பெருவளம் பெற்றக்கால், இது தெய்வ அருள்;