பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இ. புலவர் கா. கோவிந்தன் இது, பூவை நிலையில் தொல்லியல்பிற்கு எடுத்துக்காட்டு. இந்திரன் என்னின் இரண்டேகண்; ஏறு ஊர்ந்த அந்தரத்தான் என்னின் பிறை இல்லை. அந்தரத்தின் கோழியான் என்னின் முகன்ஒன்றே, கோதையை ஆழியான் என்று உனற்பாந்து முத்தொன்ாதும் 30 இது, அரசரை அமரராகப் பாடும் பூவை நிலைக்கு எடுத்துக்காட்டு. முல்லை நிலத்து ஆயர் தம்மையும் தம் பொருளையும் காக்க வல்ல தலைவன் ஒருவன் தேவை என உணர்ந்து தமக்குள்ளே தேர்ந்து கொண்ட அத்தலைவன் கோன் எனப்பட்டான். அவ்வாறு தோன்றிய அரசவழி, பின்னர் ஒன்று பலவாகப் பிரித்தது. பிரிவு பலவாயினும், தமிழகம் முப்பெரும் பிரிவினை மட்டுமே கொண்டு, அப்பிரிவிற்கு முறையே சேரர்வழி, சோழர் வழி, பாண்டியர் வழி எனப் பெயரிட்டுப் போற்றிற்று. அவ்வழி வந்தவேந்தர்களிடையே வேறுபாடு அறிதற்கு, முறையே பனந்தோடு, ஆத்திப்பூ வேப்பம் பூ மாலைகளை அவர்க்கு அடையாளமாக்கி அரசியல் மேற்கொண்டது. பகைவர், தம் ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டக்கால், மக்கள் மன்னனிடம் சென்று முறையிட, அவன் விரைந்து சென்று அவ்வெட்சியாரை வென்று அவ்வானிரையை மீட்டுத் தருவான். தண்டா ரணியம் என்ற வடநாட்டுக் காட்டகத்தாராய கொடியோர் சிலர் கொண்டு சென்ற தன் நாட்டு ஆட்டு மந்தைகளை, அவர்களை அழித்து மீட்டுக் கொண்டு வந்து, தன் தலைநகராம் தொண்டிநகர்வாழ், அவற்றின் உடையவர் பால் ஒப்புவித்து, அதனால் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்ற சிறப்புப் பெயர் பூண்ட சேரவேந்தன்