பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 98

1. சாபம்: பெரியோர்கள், முனிவர்கள், தவசிகள் - ஏன் ? சாதாரண மக்கள் கூட - தகாத செயல்கள் நடைபெறும்பொழுது அவற்றைப் பொறுக்காமல் செயல்புரிந்தோரைச் சபிப்பதைக் கண்டு அஞ்சும் நம்பிக்கை இருந்து வந்ததைக் காவியங்களில் காணலாம். சிலப்பதிகாரத்தில் ஒன்றைக் காட்டுவேன். கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் ஆகிய மூவரும் காவிரியின் தென் கரையை அடைந்து శ్రీశ్రీ பூம்பொழிவில் தங்கியிருக்கின்றனர். அவ்வழிப் போந்த ஒரு பரத்தையும் துர்த்தனும் அங்கு வந்தனர். அவர்கள் கவுந்தி படிகளை நோக்கி "தவப் பெரியீர், தும்மொடு போந்த இவர்கள் யாவர்?" என்று வினவ, கவுந்தியடிகள், "இவர்கள் என் மக்கள்” என்று மறுமொழி கூற, உடனே அவர்கள் "உடன்பிறந்தோர் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழ்தல் முறையா? நீதி துல்களில் அதற்கு இடம்

உண்டா?" என்று வினவினர். இதனைக் கேட்ட கண்ணகி

இரு செவிகளையும் பொத்திக் கொண்டு, கணவன் முன் தடுங்கி நிற்கின்றாள். உடனே கவுந்தி அடிகள்,

எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை முள்ளுடைக் காட்டில் முதுநரி யாகெனச் சாபம் இடுகின்றார். உடனே அவர்கள் நரிகள்ாகி நெடுங்குரலிட்டுக் கூவத் தொடங்கினர். இதனைக் கேட்ட கோவலனும் கண்ணகியும் அவர்கள்மீது இரக்கம் கொ

நெறியின் நீங்கியோர் நீரல் கூறினும் அறிவா மைஎன்று அறிதல் வேண்டும் செய்தவத் தீர்தும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீ ரோஎன

என்று வேண்டுகின்றனர். அடிகளும், "தமது அறியாமை காரணமாக இன்று நர்ப்பிறவி உற்ற இவர்கள் உறையூர் மதிற் புறமாகிய காவற்காட்டில் திரிந்து பன்னிரண்டு