பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் இ t5

விதியினாலாட்டப் பெற்ற தந்தையார் முதலியோரிடத்து யாதும் குற்றம் இல்லை; தந்தையார் முதலியோரிடத்துக் குற்றம் கூறுவது எய்தவன் இருக்க அம்பை போவது போலாகும். ஊழை வெகுள்வது. தண்டிக்கப் பெற்ற தண்டனையை விதிக்கும் சட்டத்தின்மீது வெகுள்வதாகும். அன்றியும் ஊழை வெல்லுதல் எவ்வளவு வலிமை யோர்க்கும் இயலாது; ஆதலால் நீவெகுண்டு யாது பயன்' என்று கூறி இலக்குவனைச் சமாதானப்படுத்துகின்றான் இராமன்.

இராமனின் மணிமுடிசூடும் விழாவின்பொருட்டு நகர் அலங்கரிக்கப் படுதலைக் காண்கின்றாள் கைகேயியின் தோழி மந்தரை. இதனைக் கவிஞ்ன்,

இன்னல்ச்ெய் இராவணன்

இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக்

கூனி தோன்றினாள்' என்று காட்டுவான். இராவணன் இழைந்த தீவினைகூனி வடிவில் தோன்றியதாக உருவகப் படுத்துகின்றான். மேலும்,

அரக்கர் பாவமும் அல்லவர்

இயற்றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள்

துமொழி மடமான் இரக்கம் இன்மையன் றோஇன்று.இவ் உலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப்

பருகுகின் றதுவே" - எனறு கூறுவான். "இராக்கதாகள புரிந்த தீவினையும் தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும் ஏவுதலால்

22. அயோத்தி - மந்தரை சூழ்ச்சி - 39 23. மேற்படி - 75