பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்று விதியின் வலியை எடுத்துகூறி, "இந்த உண்மையை உணர்ந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர்உளர்? நல்ல இடத்தை நாடிச் சென்ற நீ அந்த இடத்திற்கே திரும்பச் சென்று விடுக" என்று பணிக்கின்றான்,

தமையன் இறந்தது குறித்து வீடணன் வாய்விட்டுக் கதறுவதை ஆறுதல் கூறி நிறுத்தும் சாம்பவான் விதியைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

குன்றோங்கு நெடுந்தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத் தாகிச் சென்றோங்கும் உணர்வினையோ தேறாதே

அழுந்துதியோ?” என்ற கவிதைப்பகுதியில் இக்குறிப்பினைக் காணலாம். "விதியின் நிலையை அறியாதவனா நீ? இந்த உணர்வு உனக்கு எப்படி வந்தது? தெளிவின்றி இராவணன் இறந்தது விதியின் செயல் என்று அறியாமல் இரங்குவது-துயரத்தில் அழுந்துவது-நினக்குச் சிறிதும் தகுதியன்று' எனத் தேற்றுகின்றான் கரடியரசன்.

3. முடியாட்சியில் மக்கள் குரல்: மனிதனுடைய பிறப்பிலேயே சுதந்திரப் பண்பு அமைந்து கிடக்கின்றது. சிறிது விவரம் தெரிந்த பின்னர் குழந்தை சில செயல்களைத் தானே செய்து கொள்ள விழைகின்றது; பிறர் செய்து தர முயலும்போது அதனை வெறுக்கின்றது. இதனால் மனித வாழ்க்கையில் சுதந்திரப் பண்பு இயல்பாக அமைந்த ஒன்று என்பதைக் காணமுடிகின்றது.

நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகவே இவ்வுலகெங்கனுமுள்ள நாடுகளில் கோனாட்சியே நிலவி வந்துள்ளது. அரசர்கள் தம் கடமைகளில் தவறியதாலும் குடிமக்களின் அறிவுமிகுந்ததாலும் காலப் போக்கில்

31. யுத்த இராவணன் வதை - 227