பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 129

மாருதி வினய வார்த்தை

செவிமடுத்து அமிழ்தின் மாந்திப் பேரறி வாள நன்று

நன்றெனப் பிறரை நோக்கிச் "சீரிது மேலிம் மாற்றம்

தெளிவுறத் தேர்மின்' என்னா ஆரியன் உரைப்ப தானான்

அனைவரும் அதனைக் கேட்டார்"

அநுமன் உரைத்தது சரியே என்று காரணங்களுடன் எடுத்து விளக்கி வீடணனை ஏற்றுக் கோடலே தக்கது என்று முடிவும் கூறுகின்றான். வீடணனைக் கொணருமாறு சுக்கிரீவனையே அனுப்புகின்றான் இராமன். இந்த நிகழ்ச்சியால் இராமன் மக்கள் குரலுக்கு மதிப்புக் கொடுத்தமையையும், கிட்கிந்தை அரசனிடம் தான் உதவி வேண்டித் தோழமை பூண்டிருந்தபொழுதும் அப்பண்பைப் பலர் அறியக் காட்டினமையையும் அறிகின்றோம்.

இலங்கை அரசு. இஃது அரக்கர் அரசு. இங்கு மக்கள் குரலுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதைக் காண்போம். ஆரணிய காண்டத்தில்தான் முதன்முதலாக இராவணன் அரசு வீற்றிருக்கும் சிறப்பு காட்டப் பெறுகின்றது. இந்நிலையில் மூக்கும் காதும் வெம்முரண்முலைக் கண்களும் இழந்த சூர்ப்பனகை இலங்கை நகர்க்கு வருகின்றாள். அவள் வந்த நிலையைக் கவிஞன்,

தங்கையும் அவ்வழித் தலையில் தாங்கிய செங்கையள்; சோரியின் தாரை சேந்துஇழி கொங்கையள்; மூக்கிலள்; குழையில் காதிலள்

o 次》 冷 - 4ث يع மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள்

43. யுத்த. வீடணன் அடைக். 106 44. ஆரணிய - மாரீசன் வதை - 24,