பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கண்ணைகியும் காணும் வண்ணம் முன்னர் ஆயர்பாடியில் எருமன்றத்தின்கண் கண்ணன் தம்முனாகிய பலராமனுடன் விளையாடிய பாலசரித நாடகங்களுள் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தினை, ஆநிரையும் கன்றுகளும் துன்பம் ஒழிவனவாக என்று கூறியாம் ஆடுவோம்” என்கின்றாள். இங்கு சகுனம் பார்த்தல் போன்ற உற்பாதங்களில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை புலனாகின்றது.

சீவக சிந்தாமணியிலும் இத்தகைய குறிப்பு ஒன்றைக் காண்கின்றோம். சீவகன் நால்வகைச் சேனையுடன் இராசமாபுரத்தின் புறத்தே தங்குகின்றான். சீவகனின் மாமனும் இராசமாபுரத்து அரசனுமான கோவிந்தராசன் தன்னிடமுள்ள திரிபன்றி என்னும் இயந்திரப் பன்றியை அம்பெய்து வீழ்த்துபவனே தன் மகள் இலக்கணைக்குக் கணவன் என்று அறிவிக்கின்றான். கட்டியக்காரனும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் படையுடன் வருகின்றான். கட்டியங்காரனுக்கு இறுதிக்காலம் நெறுங்குகின்றது. இதனை அறிவிப்பது போல் நன்னிமித்தம் தோன்றுகின்றது.

நெறியின் நல்கின புள்ளுதி மித்தமும் இறைவன் கண்வலன் ஆடிற்று இயைந்தரோ"

என்ற பாடலில் புள்ளும் நிமித்தமும் நல்கின; கோவிந்தராசனின் வலக்கண் பலகாலும் துடித்தன. என்பதில் சகுனம் குறிப்பிடப் பெறுகின்றது. ஆடவர்க்கு வலக்கண் துடித்தலும் மகளிர்க்கு இடக் கண் துடித்தலும் நன்னிமித்தங்களாகும் என்பது மக்கள் நம்பிக்கை -

கம்பன் காவியத்தில் நிமித்தம் பற்றிய குறிப்புகள் வரும் ஓரிரு இடங்களைக் காட்டுவேன். சக்கரவர்த்தித் திருமகனின் திருமணம் முடிந்த நிலையில் தசரதன் 50. சீவக. சிந், 2168 (மண்மகள் - 67)