பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 151

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனுக்கும் ஏனைய சேர சோழ வேந்தர்கட்கும் பகைமை உண்டாயிற்று. அது காரணமாக அவ்விருவரும் ஒருங்கு கூடி பாண்டியனுடன் பொருதற்குப் போந்தனர். "வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும் என்ப" என்று கேள்வியுற்றேன். அவர்களை அமரின்கண் அலறத் தாக்கிப் புறங்காணேனா யின் தன் அருகிலிருந்த மனைவியைக்காட்டி,

. ..a•ss...............சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாடி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப்பிறர்

  • ,础 - - • , an 88 வன்புலம் காவலின் மாறியான் பிறர்க்கே

என்று வஞ்சினம் (சூளுரை) கூறுகின்றான். தான் உேள்ளில் வெல்லாவிடில் () தன் மனைவியை விட்டுப் பிரிதல் (2) அறனிலை திரியா அவையில் அறம் தெரியாத ஒருவனை நியமித்து கொடுங்கோல் செய்தவனாக ஆதல் (3) மறுபிறப்பில் தென்புலம் காக்கும் சிறப்பிழந்து பிறர் வன்புலம் காக்கும் காவலர் குடியில் பிறக்க நேர்தல் என்ற மூன்றையும் அடைவதாக வஞ்சினம் கூறுவதை அறிகின்றோம்.

பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசருமாகிய எழுவருக்கும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் பெரும்போர் மூண்டது. அக்காலத்தில் இவன் மிக்க இளையவன். வேந்தரும் இவன் இளையவன்தான் என இகழ்ந்து நால்வகைப் படையும் நிரம்ப உடையவன் எனத்

68. புறம் - 71